விண்ணப்பங்கள் வரவேற்பு கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க நிர்வாகக்குழு தீர்மானம்
திருவாரூர், அக். 23: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் திருவாரூரில் மாவட்ட தலைவர் முருகையன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் ஜோசப் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் நாகை எம்பி செல்வராஜ், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், தற்போது நடைபெற்று வரும் குறுவை அறுவடை பணிகளையொட்டி குறைந்த அளவிலேயே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் கூடுதலான அளவில் கொள்முதல் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் குடோன்களுக்கு இயக்கம் செய்திட வேண்டும், விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் வழங்கப்படும் விவசாய கடனை அலைகளைக்காமல் ஒரே தவணையாக வழங்கிட வேண்டும்.
மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறுவை நெற்பயிர் மற்றும் இளம் சம்பா பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் கோரிக்கைகள் குறித்த கடிதத்தை கலெக்டர் மோகனசந்திரனிடம் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.