திருத்துறைப்பூண்டி, ஆக.19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக சர்வதேச ஜெனிவா ஒப்பந்த தின பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மு ச பாலு தலைமை வகித்து பேசும் போது போர்க்காலத்தில் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களின் நிலையை மேம்படுத்துவதற்கான ஜெனிவா ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட நாளை குறிப்பிடுகிறது என்றார். இந்த ஒப்பந்தத்தை ரெட் கிராஸ் இயக்கம் உருவாக்கியது என்று கூறி போரின்போது பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் சிகிச்சை பெற தகுதியானவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜா செய்திருந்தார்.
+
Advertisement