திருவாரூர், ஆக.19: : திருவாரூர் மாவட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், 41 மாத பணி நீக்க காலத்தினை பணிகாலமாக அறிவிக்க கோரிக்களை வலியுறித்தி சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் சாலை பணியாளர் சங்கத்தினர் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிகாலமாக அறிவிக்க வேண்டும், மாநிலம் முழுவதும் இருந்து வரும் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் திருவாரூரில் நேற்று நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக சாலை பணியாளர் சங்கத்தினர் முகமூடி அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
+
Advertisement