திருத்துறைப்பூண்டி, டிச. 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். முன்னதாக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார்.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சித்தமருத்துவர் அனுஷா, மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். மாணவர்களிடையே அவர் உரையாற்றியபொழுது தன் சுத்தம், சுகாதாரம், சுற்றுப்புற சுகாதாரம், சரிவிகித உணவு உள்ளிட்டவற்றை பற்றியும் எடுத்துரைத்தார். முன்னதாக ஆசிரியர் யோகராஜன் வரவேற்றார்.
நிறைவில் நாட்டு நலப்பணி உதவித் திட்ட அலுவலர் கலைச்செல்வன் நன்றி கூறினார். ஆசிரியர்கள் கவிதா, சின்னத்துரை, அன்புக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.


