திருவாரூர், டிச. 7: திருவாரூரில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 355 பயனாளிகளுக்கு ரூ.19 கோடியே 81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.தமிழக முதல்வர் சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நுற்றாண்டு நூலகம் அரங்கிலிருந்து காணொளி காட்சி வாயிலாக முதமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் மோகனச்சந்திரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


