நீடாமங்கலம், டிச. 7: நீடாமங்கலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையில் தாளடி, சம்பா சாகுபடி நெற்பயிர் மீண்டும் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்து உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் டிட்வா புயலின் தாக்கத்தால் தொடர்ந்து மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை மும்முரம் அடைந்த நிலையில் ஏற்கனவே மழை நீரில் மூழ்கிய இளம் நெற்பயிர்கள் மீண்டும் முற்றிலும் மூழ்கி அழுகியது.
எனவே இந்த மழையினால் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 33 ஆயிரம் ஏக்கரில் தாளடி நெல் சாகுபடியும், 18 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி பணிகளையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


