திருத்துறைப்பூண்டி, செப்.2: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி அனைத்து குழந்தைகளுக்குமான உரிமை என்ற தொலைநோக்குப் பார்வையில் எந்தக் குழந்தைக்கும் கல்வி விடுபடக் கூடாது என்பதை உறுதி செய்யும் விதமாக மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிவது பள்ளியில் சேர்ப்பது மற்றும் இடைநிற்றல் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து கல்வி பெறுவதனை உறுதி செய்வது போன்ற பல்வேறு முயற்சிகளை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு நிலைகளில் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாதந்தோறும் முதல் திங்கட்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை வழிபாட்டு கூட்டத்தில் ”ஒற்றுமையை வளர்ப்போம் ” உறுதிமொழி யானது ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. மாதத்தின் முதல் திங்கட்கிழமை என்பதால் திருத்துறைப்பூண்டி வட்டார வள மையத்திற்குட்பட்ட தேசிங்குராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொக்கபள்ளி, தலைமையாசிரியர், கண்ணகி, சிறப்பு பயிற்றுனர் ஜானகிராமன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒற்றுமையே வளர்ப்போம் உறுதி மொழியை ஏற்றனர்.மேலும்பாமணி ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளி, தலைமை ஆசிரியை கிருஷா, சிறப்பு பயிற்றுனர் ஆரோக்கிய விஜய ராணி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஒற்றுமையை வளர்ப்போம் உறுதி மொழியை ஏற்றனர்.