முதலை கவ்விச்சென்றதில் கல்லூரி மாணவன் பலி கை, கால்களை கழுவியபோது சோகம் சாத்தனூர் அணை நீர்பிடிப்பு பகுதியில்
தண்டராம்பட்டு, செப்.15: சாத்தனூர் அணை நீர்பிடிப்பு பகுதியில் கை, கால்களை கழுவியபோது முதலை கவ்விச்சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சி, சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வேண்டாமணி. இவர்களது மகன் முனீஸ்வரன்(19). திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை கண்ணன், மகன் முனீஸ்வரன் ஆகிய இருவரும் தங்களுக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றனர். பின்னர், மாடுகளை அருகில் உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு முனீஸ்வரன் சாத்தனூர் அணை தண்ணீர் தேங்கும் பகுதியான பெரிய மலை வேடியப்பன் கோயில் அருகே கை, கால்களை கழுவுவதற்காக நீரில் இறங்கினார்.