Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊத்துக்கோட்டையில் தயார் நிலையில் மழைக்கால தடுப்பு உபகரணங்கள்: பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு

ஊத்துக்கோட்டை, நவ.29: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மழைகால முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருந்த மழை கால தடுப்பு பொருட்களை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தனார். திருவள்ளுர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் டிட்வா புயல் மழை காரணமாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுருத்தியதின் பேரில் திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் நேற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திடீரென ஆய்வு மேற்க்கொண்டு தேவையான பொருட்களான நீர் உறிஞ்சும் மின் மோட்டார், மரம் அறுக்கும் இயந்திரம், டார்ச், கயிறு, கடப்பாறை, கொசு ஒழிப்பு புகையான், மழை காப்பு (ரெயின் கோர்ட்), முள் கம்பி, தலைக்கவசம், ரோப் கயிறு, புல் அறுக்கும் எந்திரம், ஜெனரேட்டர், கவச உடை உள்ளிட்ட உபகரணங்களை திருவள்ளுர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் மேற்கண்ட பொருட்கள் நல்ல முறையில் செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

பின்னர், மணல் மூட்டைகளை ஆய்வு செய்தார். மேலும், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குடிநீர் நிரப்பி, குலோரினேஷன் செய்யப்பட்டா என ஆய்வு செய்தார். அவருடன் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், தலைமை எழுத்தர் முருகவேல், தூய்மைபணி மேற்பார்வையாளர் செலபதி, கவுன்சிலர்கள் கோகுல்கிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, பேரூராட்சியில் செயல் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் டிட்வா புயல் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கூறினார்.