திருவள்ளூர், நவ.27: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகில், கிராம உதவியாளர் நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 151 பணியிடங்களை நிரப்பிட மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுதும் திறனுக்கான தேர்வு 29ம் தேதி (நாளை மறுநாள்) காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என்று உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எழுதும் திறனுக்கான தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. எனவே, தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


