Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விளம்பரத்திற்காக தலைவர்களை விமர்சனம் செய்கிறார் விஜய்: ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ பேட்டி

திருவள்ளூர், செப்.27: பூந்தமல்லி நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா நேற்று நடந்தது. சங்க தலைவர் தாமஸ் பர்ணபாஸ், செயலாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். இளங்கோவன், பொருளாளர் நாகராஜன், நூலகர் நிஜந்தன், துணை தலைவர்கள் வினோபாணி, சிவராமன், தேவி, ராஜேந்திரன், தர், வடிவேல், ரஞ்சித், பாலகிருஷ்ணன், டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு 150 பேருக்கு கிரைண்டர்கள் உள்பட பல்வேறு பரிசு வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் 2026 தேர்தலில் போட்டி என விஜய் கூறி வருவது விளம்பரத்திற்காக மட்டும் தான். விஜய் விளம்பரத்திற்காக மட்டுமே தலைவர்களை விமர்சித்து வருகிறார். உண்மையிலேயே விஜய் தேர்தலில் மக்களை சந்தித்து வெற்றி பெற்றால் அவரை வாழ்த்துவோம். யாராக இருந்தாலும் தேர்தல் மூலமாக மக்களை சந்தித்து வெற்றி பெறும்போது, அவர்களை வாழ்த்துவதில் முதன்மையாக இருப்போம். தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்கள் உள்ளன என்றார். நிகழ்வின்போது சங்க இணை செயலாளர்கள் ரகுநாத், தமிழ்வேந்தன், கண்ணன், அசோகன், எஸ்தர், பன்னீர்செல்வம், வசந்தகுமார், சுரேஷ்குமார், மத்தியஸ், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.