திருத்தணி, அக்.26: 4ம் நாள் கந்த சஷ்டி விழா முருகப்பெருமான் திருவாபரண அலங்காரத் தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த புதன்கிழமை சண்முகருக்கு லட்சார்ச்சனையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவையொட்டி மூலவருக்கு தினமும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் 4ம் நாளான நேற்று அதிகாலை மூலவருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு திருவாபரண அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் சண்முகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
+
Advertisement
