அம்பத்தூர், செப்.26: பெரம்பூர் கேரேஜ் அருகே தெற்கு ரயில்வே பணிமனை உள்ளது. இங்கு, ரயில் பெட்டி பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று காலை இங்கு ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில்வே ஊழியர்கள் டிங்கரிங் வேலை செய்த நிலையில், ஒப்பந்த ஊழியர்கள் பெயின்டிங் வேலை செய்தனர். அப்போது, டிங்கரிங் செய்த பகுதியில் வைத்திருந்த தின்னர் மீது தீப்பொறி பட்டு தீப்பிடித்தது. காற்றில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதில், காமராசன், சுகனேசன் ஆகிய 2 ரயில்வே ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த ஐ.சி.எப் போலீசார், இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
+
Advertisement