பள்ளிப்பட்டு, செப்.24: பள்ளிப்பட்டு கிராம தேவதை கொல்லாபுரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவில் 2ம் நாளான நேற்று மாலை கொல்லாபுரி அம்மன் உற்சவர் காயத்திரி தேவி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
தீபாராதனை பூஜைகள் தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது. பொதுமக்கள் அம்மனுக்கு கற்பூர தீபாராதனை செய்து வழிபட்டனர்.