திருவள்ளூர், செப்.23: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று மாலை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் மணிமேகலா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஜெயந்தி, உமாராணி, பிரவீனா, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் லட்சுமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், முறையான ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கக் கோரி கோஷம் எழுப்பினர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
+
Advertisement