திருத்தணி, செப்.19: திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு இரவு நேரங்களில் குளிர் காற்று வீசுகிறது.
இந்நிலையில், நேற்று மாலையும் திருத்தணி அருகே உள்ள கே.ஜி.கண்டிகையில் சுமார் அரைமணி நேரம் பரவலான மழை பெய்தது. இதனால் பள்ளி நேரம் முடிந்த நிலையில் மாணவ,மாணவிகள் மழையில் நனைந்தபடி உற்சாகமாக வீடுகளுக்குச் சென்றனர். அப்போது வானில் ஏற்பட்ட வானவில்லை மாணவர்கள் கண்டு ரசித்தனர். இதேபோல் திருத்தணியிலும் மிதமான மழை பெய்தது.