Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

2 மாணவர்கள் பலி

போரூர், அக்.17: காஞ்சிபுரம் பி.எஸ்.கே தெருவை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (20), தேனம்பாக்கத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (19). நண்பர்களான 2 பேரும், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரில் இ.சி.எஸ் 3ம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை இருவரும் கல்லூரி முடிந்து, பைக்கில் காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டனர். வண்டலுார் - வாலாஜாபாத் சாலை வழியாக சென்றபோது, ஒரகடம் ஐ.டி.ஐ அருகே, வாலாஜாபாத்தில் இருந்து வந்த லாரி யூ-டர்ன் எடுக்க முற்பட்டது. அப்போது, அதிவேகமாக வந்த பைக், கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயமடைந்த 2 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார், 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.