பொன்னேரி, செப்.16: செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் எஸ்ஐ விஜயகுமார் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று செங்குன்றம் மொண்டி மாநகர் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில், அவரது பையில் 11 கிலோ கஞ்சா சிக்கியது. இதனையடுத்து, போலீசார் அந்த வாலிபரை மீஞ்சூரில் உள்ள செங்குன்றம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்தர்(38) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து ரவீந்தரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
+
Advertisement