திருவள்ளூர், நவ.13: திருவள்ளூர் மாவட்ட தடகளப் போட்டிகள் வரும் 28ம்தேதி திருவள்ளூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், 14 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகள், 21.12.2011 முதல் 20.12.2013 தேதிக்குள்ளாக பிறந்திருக்க வேண்டும், 16 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகள் 21.12.2009 முதல் 20.12.2011 தேதிக்குள்ளாக பிறந்திருக்க வேண்டும், 14 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகளுக்கு டிரையத்லான் பிரிவு ஏ,பி,சி மற்றும் கிட்ஸ் ஜவலின் என 4 போட்டிகளும், 16 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகளுக்கு 60மீ, 600மீ உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்பட 7 போட்டிகள் நடைபெற உள்ளது. விபரங்களுக்கு 90874 66646, 95661 98156 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
+
Advertisement
