ஆவடி, அக்.10: திருவள்ளூர் மத்திய மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் திமுக பாக ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். இதில் துணைப் பொதுச் செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டு பாக ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசுகையில், ‘2026ல் நடைபெறவிருக்கும் தேர்தல் மிக முக்கியமானது. கையில் அதிகாரம் இல்லாத அரசியல் கட்சிகள் மோடியை எதிர்க்க பயந்துகொண்டு இருந்த நிலையில், தமிழ்நாடு மோடிக்கு எப்போதுமே அவுட் ஆப் கன்ட்ரோல் என பேசியவர் நமது முதல்வர். திமுக நிர்வாகிகள் இந்த தேர்தலை எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும். தலைவர் கூறுவதுபோல் ‘இருநூறு வெல்வோம், வரலாறு படைப்போம்’ என அனைவரும் சூளுரைக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், தொகுதி பார்வையாளர்கள் செல்வராஜ், நிவேதா ஜெசிகா, மாநில, மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெரால்டு, சி.எச்.சேகர், மோகன், அமுதரசன், மா.ராஜி, சீனிவாசன், ஜெயபாலன், காயத்ரிஸ்ரீதர், பா.நரேஷ்குமார், எத்திராஜ், ராஜேந்திரன், விமல்வர்ஷன், முத்தமிழ்செல்வன், குமார், காஞ்சனாசுதாகர், மகாதேவன், சங்கர், ஆவடி மாநகர மேயர் ஜி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
+
Advertisement