சென்னை, அக்.10: தேசிய மருத்துவ உதவியாளர் தினத்தை முன்னிட்டு, விநாயகா மிஷனின் சென்னை பையனூரில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் மருத்துவ உதவியாளர் பிரிவின் சார்பில், 58வது தேசிய மருத்துவ உதவியாளர் தினமானது, கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் பொறுப்பு இயக்குனர் முத்துராஜ் வரவேற்று பேசினார். கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில்குமார் தலைமையேற்று இத்தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். சிறப்பு அழைப்பாளராக சென்னை கிளினிக்கல் கேர் மருத்துவமனையின் கழுத்து மற்றும் தலை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெரிக் அஸ்வின் பங்கேற்று, மருத்துவமனைகளில் மருத்துவ உதவியாளர்களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் கையாளும் மருத்துவம் சார்ந்த நெறிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும் இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் வெள்ளை அங்கி வழங்கப்பட்டது. இதில் துறையை சேர்ந்த இளங்கலை பிரிவு மருத்துவ உதவியாளர் பிரிவு மாணவர்களுக்கு வெள்ளை அங்கியும், ஸ்டெதாஸ்கோப்பும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழியினை ஏற்றனர். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் மருத்துவ உதவியாளர் பிரிவு உதவி பேராசிரியர்கள் சந்தோஷ் மற்றும் சினேகா ஆகியோர் செய்திருந்தனர்.
+
Advertisement