Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசு மாநகர பேருந்தில் பயணம் செய்த தொழிலாளி மயங்கி விழுந்து பலி

திருவள்ளூர், டிச.9: திருவள்ளூர் அடுத்த அரசு மாநகர பேருந்தில் பயணம் செய்த, பூ மாலை கட்டும் தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் அடுத்த பழைய கரிக்கலவாக்கத்தை சேர்ந்தவர் உமாபதி (39). இவருக்கு சங்கீதா (36) என்ற மனைவியும் (16) மற்றும் 14 வயதுகளில் இரண்டு மகன்களும் உள்ளனர். உமாபதி பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் சென்று விட்டு பிறகு இரவு 7:30 மணியளவில் தடம் எண் 505 என்ற செங்குன்றம் சென்ற மாநகர அரசு பேருந்து மூலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒதிக்காடு அருகே அரசு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தில் மயங்கி விழுந்தார். அப்போது பேருந்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இவரது மனைவி சங்கீதா புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.