Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆர்.கே.பேட்டையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முன் சோதனை பயிற்சி வகுப்பு

ஆர்.கே.பேட்டை, நவ.7: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவிப்பின்படி, ஆர்.கே.பேட்டையில் 2027ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முன் சோதனை பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் 2027ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்மாதிரி சோதனை நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவித்திருந்தார். 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பானது, இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன் சோதனையை தமிழ்நாடு மாநில அரசுடன் கலந்தாலோசித்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.கே.பேட்டை வட்டத்தில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளான வெள்ளாத்தூர், வங்கனூர், ஸ்ரீகாளிகாபுரம், சந்தானவேணுகோபாலபுரம், இராஜநகரம், இராகநாயுடுகுப்பம், காண்டாபுரம், கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஜி.சி.எஸ்.கண்டிகை ஏ, ஜி.சி.எஸ்.கண்டிகை பி, பாலாபுரம், அம்மனேரி, அம்மையார்குப்பம், ஆதிவராகபுரம், செல்லாத்தூர், விளக்கானம்பூடி ஆகிய 17 கிராமப்புற பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கல்வி, வருவாய், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த பல்வேறு துறைகளிலுள்ள அலுவலர்கள் களப்பணிக்காக கணக்கெடுப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் செயல்படுவார்கள் எனவும், களப்பணிகளுக்கு முன் கணக்கெடுப்பாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே.பேட்டை வட்டத்தில் கணக்கெடுப்பு எடுக்கப்படும் மாதிரி பகுதிகளில் உள்ள பொதுமக்கள், முன் சோதனையின்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறும், களப்பணியாளர்களுடன் துல்லியமான விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்திருந்தார்.

அதன்படி, ஆர்.கே.பேட்டையில் உள்ள சி.எம்.அண்ணாமலை கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன் சோதனை பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் சுந்தரேஷ் பாபு, துணை பதிவாளர் லிங்கன் ஞானதாஸ், துணை இயக்குநர்கள் வசந்தகுமார், சுபா, ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் சரஸ்வதி, துணை வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன் சோதனை பயிற்சி அளித்தனர்.