பூந்தமல்லி, நவ.7: திருவேற்காட்டில் மன உளைச்சலில் இருந்து வந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதில் இறந்தவரின் கண்களை அவரது பெற்றோர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(42). இவர் ஏ.சி., பிரிட்ஜ், மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுமதி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹரிணி(17) என்ற மகளும், அரிஹரன்(15) என்ற மகனும் உள்ளனர். இதில், ஹரிணி திருவேற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் கல்லூரி முடிந்து அவரது தந்தை மகளை வீட்டிற்கு அழைத்து வந்தவர் வீட்டில் விட்டு, விட்டு கதவை பூட்டிவிட்டு சென்றார். இரவு அவரது தாய் வந்து பார்த்தபோது ஹரிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, இறந்து போன தனது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது பெற்றோர் தெரிவித்த நிலையில் கால தாமதமானதால் மாணவியின் கண்கள் மட்டும் தானமாக பெறப்பட்டது.
+
Advertisement
