திருவள்ளூர், நவ.6: திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று (6ம் தேதி) காலை 11 மணி முதல் 1.30 மணி வரை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெறவுள்ளார். எனவே, திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்பந்தமான புகார்கள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம் என திருவள்ளூர் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் (பொ) ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.
+
Advertisement
