திருவள்ளூர், அக்.4: திருவள்ளூர் மாவட்டத்தில் அகில இந்திய தொழிற்பயிற்சயின் முதனிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 8ம்தேதி கடைசிநாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் டிஜிடில் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு கருத்தியல் தேர்வு வரும் நவம்பர் மாதம் 4ம் தேதியும், செய்முறை தேர்வு 5ம் தேதியும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத விண்ணப்பிக்க வரும் 8ம்தேதி கடைசி நாளாகும். அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது. மேலும், இதுதொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள திருவள்ளூரில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் உதவி இயக்குநரை நேரிலோ அல்லது dstotvlr2025@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9499055663 மற்றும் 8248333532 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.