புழல், அக்.4: புழல் கிறிஸ்துவ ஆலயத்தின் சார்பில் நடைெபற்ற கேரம் விளையாட்டு போட்டியில் வென்ற இரு அணிகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. புழல் சிஎம்ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் மற்றும் சிஎஸ்ஐ திருச்சபைகள் சார்பில் ஒரு நாள் இருவர் கேரம் விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் ஆலயத்தின் வளாகத்தில் நடந்தது. இதில், 32 அணிகள் பங்கேற்று, விளையாடினர். கேரம் விளையாட்டு போட்டியில் புழல் திருச்சபை முதலிடத்தையும், சென்னை பிராட்வே வில்லியம்ஸ் சாராலஸ் நினைவாலயம் கிறிஸ்து சபை இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். இதில், முதல் இடத்தை பிடித்த அணியினருக்கு குளிர்சாதனம் பெட்டியும், இரண்டாவது இடத்தை பிடித்த அணியினருக்கு தொலைக்காட்சி பெட்டியும், விளையாட்டு வீரர்களுக்கு குக்கர்கள் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் சிஎஸ்ஐ ஆயர் இரவின் ஆர்த்தர் ஜோசுதாஸ், பிராங்க்ளின் ஜெயகுமார் ஆகியோர் பங்கேற்று, அனைவருக்கும் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்வில் கிறிஸ்து நாதர் ஆலயம் நிர்வாகிகள், கேரம் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
+
Advertisement