ஆவடி, டிச.2: ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில், ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் எச்சிஎல் டெக்னாலஜி ஹோப் பவுண்டேஷன் உதவியுடன் தரை மற்றும் முதல் தளத்துடன் நூலகம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில், காவலர் சிறார் மற்றும் சிறுமிய மன்ற புதிய கட்டிடத்தை ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேற்று திறந்து வைத்தார். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் கல்வி, விளையாட்டு மற்றும் இலக்கியப் படைப்புகள் உள்ளிட்டவற்றில் தங்கள் திறமைகளை மேம்படுத்தி கொள்ளவும், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆணையர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆவடி டிஎஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

