பொன்னேரி, அக்.1: பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக பலர் காய்ச்சலால் அவதியுற்று வருகின்றனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் நாளொன்றிற்கு 1000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள் நோயாளிகள் பிரிவில் 24 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று துரை.சந்திரசேகர் எம்எல்ஏ, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது தலைமை மருத்துவர் கல்பனா, காங்கிரஸ் நிர்வாகிகள் புருஷோத்தமன், நந்தாராஜ், உதயா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
+
Advertisement