Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

6 வழிச்சாலை பணிக்கு வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருள் திருட்டு: வாலிபர் கைது

திருவள்ளூர், ஆக. 4: திருவள்ளூர் அடுத்த கல்யாணகுப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை எல் அன்ட் டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் திட்ட மேலாளராக மோகன் (40) என்பவர் பணி

புரிந்து வருகி

றார்.

இந்நிலையில் அந்தப் பகுதிக்கு ஷேர் ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் அங்கு பணியில் இருந்த வடமாநில தொழிலாளர் களை மிரட்டி 6 துத்த

நாகத் தகடுகள், 13 ஜாக்கிகள், 288 இரும்பு ராடுகள், 175 இரும்பு நெட்டுகள், 1 இரும்பு தகடு ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து நேற்று முன்தினம் திட்ட மேலாளர் மோகன் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருடுபோன பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணையில், தாமரைப்பாக்கம் அருகே உள்ள மறுமலர்ச்சிநகரைச் சேர்ந்த ராம்பாபு என்பவரது மகன் ராகவன் (25) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவரவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 50 இரும்பு

ராடுகளை மட்டும் மீட்டனர்.

பின்னர் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவாக உள்ள தர்மன் என்பவரை தேடி வருகின்றனர்.