Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச பேருந்து பயண திட்டத்தால் குடும்ப வருமானம் சேமிக்கப்படுகிறது: அரசுக்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர்

திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் கையெழுத்தாக மகளிர்க்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். இந்த திட்டம் தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்படி இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்ற திருவள்ளூர் மாவட்ட பெண்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் கிராமத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு தினமும் அரசு பேருந்தில் கட்டணமில்லா இலவச பயணம் மேற்கொள்ளும் தக்கோலத்தை சேர்ந்த கீர்த்திமா ஜெகதீசன் என்ற பெண் கூறியதாவது: நான் தக்கோலத்தில் இருந்து திருவள்ளூருக்கு பேருந்தில் பயணம் செய்ய மாதத்திற்கு ரூ.1000க்கு மேல் செலவாகும்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வரும் மகளிர்க்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் தினமும் வீட்டில் இருந்து வேலைக்கு நகரப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்து வருகிறேன். இதனால் எங்களுடைய குடும்ப வருமானம் சேமிக்கப்பட்டு அதனை வேறு செலவிற்காக பயன்படுத்த முடிகிறது.

மேலும் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் பெண்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு சிறப்பு திட்டமாகும். எனவே இத்திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது சார்பிலும், திருவள்ளூர் மாவட்ட பெண்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.