Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊத்துக்கோட்டை அருகே ஆரோக்கிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

ஊத்துக்கோட்டை, ஜூன் 10: ஊத்துக்கோட்டை அருகே ஆரோக்கிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் ஆரோக்கிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளான 7ம் தேதி காலை 10 மணியளவில் யாகசாலை வாஸ்து ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் மாலை 5 மணியளவில் யஜமான சங்கல்பம், அங்குரார்ப்பணம், பிரதான ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, 8ம் தேதி காலை 8.30 மணியளவில் 4 கால யாகசாலை பூஜைகளும், திருமஞ்சனம், சீதாராம சயனாதி வாசம் ஆகியவையும் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 6 மணியளவில் விஸ்வரூபம் கோபூஜை, 5 கால பூஜைகள் ஹோமம், 7.30 மணியளவில் யாக சாலையில் இருந்து கலச புறப்பாடு நடந்தது. 8.30 மணியளவில் ஆஞ்சநேயர் மீது புனித நீர் ஊற்றி பட்டாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, 9.30 மணியளவில் மாலை மாற்றல், ஊஞ்சல் சீதாராம கல்யாணம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புழல்:செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பாரிநகர் அன்னை இந்திரா நகரில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் திருப்பணிக்காகவும், புதிய சிலைகள் நிறுவுவதற்காகவும் பாலாலயம் செய்து திருப்பணி நடைபெற்று கோயில் மகா கும்பாபிஷேகம் விழா பாரிநகர் குடியிருப்போர் பொதுநலச் சங்கத் தலைவர் மாரி தலைமையில் நிர்வாகிகள் மோகனதாஸ் பழனி ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பம்மதுகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ராஜா, சமூக பொருளாதார முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனத் தலைவர் தர்மலிங்கம், கே.ஆர்.வி. கல்வி அறக்கட்டளை நிறுவனர் வெங்கடேசன், புண்ணியசேகரன், பொன்.கோதண்டம், உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். கும்பாபிஷேகம் முன்னிட்டு கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தூபதீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும் அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில், செங்குன்றம் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.