வருசநாடு, ஆக.30: வருசநாடு அருகே சேதமடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பண்டாரவூத்து மலைக்கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த தொட்டி, முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்து இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். ஆகையால் சேதமடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.