மூணாறு, ஆக. 29: மூணாறு அருகே குண்டளை எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனில் முருகன் கோயில் வளாகத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் ஆக.5ம் தேதி இரவு உண்டியல், ஒன்றரை பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் அருவிக்காடு மாரியம்மன் கோயிலிலும் திருடர்கள் கைவரிசை காட்டினர்.
இது சம்பந்தமாக கோயில் நிர்வாகிகள் தேவிகுளம் போலீசில் புகார் அளித்தனர்.விசாரணையில் குண்டளை சான்டோஸ் காலனியை சேர்ந்த கவுதம் (20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.