டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வு தேனி மாவட்டத்தில் 10,556 பேர் எழுதுகின்றனர்: நாளை மறுதினம் நடக்கிறது
தேனி, செப். 26 : தேனி மாவட்டத்தில் நாளை மறுதினம் (செப். 28) நடக்க உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வினை 10,556 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சார்பில் நாளை மறுதினம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வானது இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
இதில் முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் இரண்டாவது கட்ட தேர்வு எழுதும் வகையில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கனவே விண்ணபதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதன்படி, தேனி மாவட்டத்தில் இத்தேர்வினை 10, 556 பேர் எழுத உள்ளனர். இதற்காக தேனி மாவட்டத்தில் 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.