சின்னமனூர், செப்.25: சின்னமனூர் நகராட்சி சார்பில், சீப்பாலக்கோட்டை சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள 50 ஆண்டுகளைக் கடந்த பழைய கடைகளை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக 82 கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கடைகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது.
அதில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஒரு கடையின் மாத வாடகை ரூ.8,500 முதல் ரூ.27,500 வரை போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர். தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட கடைகள் ஏலம் எடுக்கப்பட்டன. இன்னும் மீதமுள்ள கடைகளுக்கு விரைவில் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.