போடி, ஆக. 23: போடியில் நூற்றாண்டை கடந்த பழமை வாய்ந்த ஜமீன்தாரணி காமுலம்மாள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 3000க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இங்குள்ள பழைய கூடை பந்தாட்ட மைதானம் சிதலமடைந்த நிலையில் உள்ளதால் மாணவர்கள் விளையாடுவதற்கு சிரமமடைந்து வந்தனர்.
இதனால் புதிதாக கூடைப்பந்தாட்ட மைதானம் கட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் போடி மீனாட்சிபுரம் பேரூர் தலைவராக உள்ள திருப்பதி ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கோடை பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கு பள்ளிக்கு நன்கொடை வழங்கினார். இதனையடுத்து, கூடைப் பந்தாட்ட மைதானம் அமைக்க நேற்று பள்ளியில் பூமி பூஜை போடப்பட்டது.