தேனி, ஆக. 23: பெரியகுளத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பெரியகுளம் தொகுதி விசிக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பெரியகுளம் தொகுதி செயலாளர் சுசி தமிழ்பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மண்டல செயலாளர் தமிழ்வாணன், ஒன்றிய செயலாளர் ஆண்டிப, நகர செயலாளர் ஜோதிமுருகன் முன்னிலை வகித்தனர். தொகுதி துணை செயலாளர் ஆண்டவர் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.ரபீக் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தின்போது, வருகிற 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனவும், இக்கோரிக்கையை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.