காங்கயம், நவ.22: வெள்ளகோவில் அருகே முத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீசார் நேற்று மளிகை கடைகளில் சோதனையிட்டனர்.
போலீசார் நடத்திய சோதனையில் வெள்ளக்கோவில் தண்ணீர் பந்தல் பகுதியில் சாமியாத்தாள் (56), என்பவரது மளிகை கடைகளில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


