சின்னமனூர், ஆக. 22: சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் உலகத் தொழில் முனைவோர் தின விழா மைய தலைவர் பச்சையம்மாள் தலைமையில் நடந்தது. உத்தமபாளையம் ஆர்.டி.ஓ செய்யது முகம்மது, தாசில்தார் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தொழில் முனைவோர் மையத்தின் உதவி இயக்குனர் மோகன்ராஜ், கனரா வங்கி மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் சுயதொழில் வளர்ச்சி குறித்தும், அதன் வழிமுறைகள் பற்றியும் விளக்கமளித்து பேசினார். சுய தொழிலில் சாதனை படித்தவர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது. சுய உதவி குழுவினை சேர்ந்த பெண்கள், கல்லூரி மாணவிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.