குஜிலியம்பாறை, ஆக. 22: குஜிலியம்பாறை அருகே கரிக்காலி கோமுட்டிபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(55) பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் சிலும்பாக்கவுண்டனூர்-கரிக்காலி சாலையில் ஓரமாக நின்றுள்ளார். அப்போது அச்சாலையில் அதிவேகமாக வந்த லாரி, சாலையில் நின்று கொண்டிருந்த பழனிச்சாமி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் மீது லாரி சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி பலியானார்.
பலியான பழனிச்சாமி உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பழனிச்சாமி மகன் யோகேஷ் (23) அளித்த புகாரின்பேரில், கோட்டாநத்தம் ரெங்கபாளையம்புதூரைச் சேர்ந்த லாரி டிரைவர் கலைவாணன் (33) என்பவர் மீது குஜிலியம்பாறை எஸ்.ஐ கலையரசன் வழக்கு பதிந்துள்ளார்.