தேவதானப்பட்டி, ஆக.20: தேவதானப்பட்டி அருகே, சட்ட விரோத விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனர். தேவதானப்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ. வேல்மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று, தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த எருமலைநாயக்கன்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த ராஜபாண்டி(23), பாஸ்கரன் (48) ஆகியோரை மறித்து சோதனை செய்ததில் அவர்கள் அனுமதியின்றி விற்பனைக்காக மது பாட்டில்களை சாக்கு பையில் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.