வருசநாடு, ஆக.20: வருசநாட்டில் பலத்த காற்றால், மரம் சாய்ந்து விழுந்து வீடு சேதமடைந்தது. கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு கிராமத்தில், நேற்று இரவு முன்தினம் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதில் சிங்கராஜபுரம் பிரதான சாலையில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பால்சாமி என்பவரின் வீட்டின் மீது, பழமையான இலவமரம் சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூரைகள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக அவர், சிறு காயங்களுடன் தப்பினார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து, மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்வயர்களை துண்டித்து, மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து பால்சாமி கூறுகயில், வீடு பலத்த சேதமடைந்ததால், நிவாரணம் வழங்கிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.