வருசநாடு, நவ.18: வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துக்காடு கிராமம் உள்ளது. இங்கு சுடுகாட்டிற்கு அடிப்படை வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக ஆத்துக்காடு கிராமத்திற்கு என்று எரியூட்டும் கொட்டகை, சுற்றுச்சுவர், ஈமகிரி செய்ய தண்ணீர் வசதி, சாலை வசதி, காத்திருப்போர் அறை, தெருவிளக்கு போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரையும் இல்லை. இதனால் பொதுமக்கள் பிணங்களை எரிக்கும் பொழுது மிகவும் சிரமம் அடைகின்றனர். இது குறித்து கிராமவாசிகள் கூறுகையில், மனு கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை. இதனால் தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
+
Advertisement


