தேனி, செப்.18: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தேனி மாவட்ட கிளை சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது ஆசிக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலனை செய்ய அமைக்கப்பட்ட குழுவினை திரும்ப பெற வேண்டும், ஏழாவது ஊதிய குழுவில் வழங்கப்பட வேண்டிய 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், மக்கள் நல பணியாளர்களை நிரந்தர படுத்த வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசை ஏற்று நடத்த வேண்டும்,
அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அரசு துறை சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளான குமார் செல்வன், வினோத்குமார், சர்ஜலாபர்வீன், சின்னச்சாமி, பாலகிருஷ்ணன், கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட நிதி காப்பாளர் காமேஸ்வரன் நன்றி கூறினார்.