போடி, ஆக.18: போடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. போடி நகரில் 33 வார்டுகள் சுற்றியுள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதானமாக இருப்பதால், ஆங்காங்கே நிலத்தடி நீர் பாசனத்தை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அக்னி நட்சத்திரம் முடிந்து தேனி மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நாட்களாக போடி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.