மூணாறு, அக். 17: மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பேக்டரி டிவிஷனை பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (23). இவர் நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து அப்பகுதியில் உள்ள வேறொரு வீட்டின் முன்பு வழக்கம் போல் தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது டூவீலர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்ற போது, அதற்குள் டூவீலர் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
சம்பவத்தில் நிஷாந்த் மூணாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டூவீலருக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் நடமாட்டம் மற்றும் கஞ்சா, மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்களின் உபயோகம் கூடுதல் உள்ளதாகவும் இதனால் இரவு நேரங்களில் காவல்துறையின் கண்காணிப்பை கூடுதல் பலப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.