தேனி, செப்.17: தேனி அல்லிநகரம் நகராட்சியின் புதிய ஆணையராக பார்கவி, பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சங்கர், கூடுதல் பொறுப்பாக தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் போடி நகராட்சி ஆணையராக இருந்த பார்கவி, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பதவி உயர்வு பெற்று நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் இவர், போடி பொறுப்பு ஆணையராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையர் பார்கவிக்கு, தேனி அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் வாழ்த்து கூறினார். மேலும், அதிகாரிகள், பணியாளர்கள், கவுன்சிலர்கள் ஆணையருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.