கம்பம், செப். 16: கம்பம் தெற்கு நகர திமுக சார்பில் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் ராஜன் தலைமை வகித்தார். தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர் குரு.குமரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ரா.பாண்டியன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பிஎல் 2, பாக முகவர்கள், தெற்கு நகர திமுக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.