போடி, செப். 16: போடி முந்தல் சாலையில் அரசு உதவி பெறும் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறை சார்பில் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் ராமநாதன், உபதலைவர் ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த் துறை தலைவர், முனைவர் அலமேலு வரவேற்றார். சுயநிதி தமிழ்த் துறை தலைவர் பாண்டி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில், கல்லூரி செயலாளர், தொடர்பாளர் புருஷோத்தமன், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ்த்துறைப் பேராசிரியர் மீனா நன்றி கூறினார்.